செங்கோட்டையனை சீண்டும் மாஃபா! திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சூப்பராம்!

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டதாக கூறி அமைச்சர் மாபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


பிரபல எழுத்தாளர் மோகன் பகவத் எழுதியுள்ள புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரபலங்களில் திரையுலகினர் தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நேர்மறையான அரசியல் தமிழகத்தில் வரவேண்டும் என்றார்.

எதிர்மறை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறினார். நல்லதை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும் என்று மாபா பாண்டியராஜன் தெரிவித்தார். அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததாக புகழாரம் சூட்டினார் மாபா பாண்டியராஜன்.

அப்போதைய கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செயல்பாடும் மெச்சத் தகுந்த வகையில் இருந்ததாக அவர் கூறினார். தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் இருக்கிறார். செங்கோட்டு எனக்கு முன்னதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் மாபா பாண்டியராஜன். அதிமுக இரண்டாக உடைந்து பின்னர் மீண்டும் சேர்ந்த போது அப்பா பாண்டியராஜனுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில் திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பாகச் செயல்பட்டது என்று கூறியுள்ளார் மகா பாண்டியராஜன் தற்போதைய பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடு குறித்து வாய் திறக்காதது சர்ச்சையாகியுள்ளது.