சித்ரா ரெடியாத்தான் இருந்தாங்க..! ஆனால் குமரன் தான் மனைவியை கூட்டிட்டு வந்துட்டார்! பாண்டியன் ஸ்டோர்ஸ் பஞ்சாயத்து!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்துவரும் குமரன் அவருடன் ஜோடியாக நடிக்கும் சித்ராவுடன் நடனமாட மறுத்து தன் மனைவியுடன் நடனமாடிய சம்பவம் அங்கிருந்தவர்களை திகைக்க வைத்துள்ளது.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜோடியாக நடித்து வருபவர்கள் குமரன் மற்றும் சித்ரா ஆகியோராவர். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆரம்பம் முதலே இந்த சீரியலில் நடித்து வந்த குமரன் மற்றும் சித்ரா ஆகிய இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர்.

திடீர் என்று இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் வெறுக்கத் துவங்கி பேச்சுவார்த்தை முடித்துக் கொண்டனர். தற்போது இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தங்களுடைய சீன்களில் பேசுவதோடு சரி மற்ற இடைவேளை நேரங்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதும் இல்லையாம் பேசிக் கொள்வதும் இல்லையாம் என்று அந்த சீரியலை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியலை பிரமோட் செய்வதற்காக விஜய் தொலைக்காட்சி நிறுவனம் இவர்கள் இருவரையும் ஜோடியாக நடனம் ஆட ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது அந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்கு சித்ரா ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் குமரன் அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மனதில் கொண்டு நடனமாட மறுத்துவிட்டாராம். இந்த சம்பவம் அந்த சீரியல் கலைஞர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சேனல் சார்பில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கலைஞர்களுக்கு இடையில் பல போட்டிகள் நடைபெற்றன. அதில் சீரியலில் இடம்பெறும் 3 ஜோடிகளும் பங்கேற்க வேண்டும் என்று கூறினர். அப்போது குமரன் , சித்ரா ஜோடியை தவிர மற்ற இரண்டு ஜோடிகளும் பங்கேற்றனர்.

 பின்னர் இரண்டாவது டாஸ்க் நடைபெற்றது அதில் ஒவ்வொரு ஜோடியும் நடனமாட வேண்டும் என்று கூறப்பட்டது . அந்த டாஸ்க்கிலும் குமரன், சித்ரா உடன் நடன அட மறுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு குமரன் தன்னுடைய மனைவி சுகாசினி உடன் வந்திருந்தார் . ஆகையால் தன் மனைவி சுகாசினியுடன் அந்த மேடையில் நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.