தெற்கத்தி மக்களுக்காக ஓயாமல் ஓடும் பாண்டியன் எக்ஸ்பிரசுக்கு வயசு 50!

பாண்டியன் விரைவு ரயில் பொன்விழா. மதுரை- சென்னை எழும்பூர்.


பாண்டியன்_எக்ஸ்பிரஸ்* துவங்கி 50 ஆண்டுகள் இன்று முடிவாகிறது. 1969இல் பெரிய எதிர்பார்ப்போடு துவங்கப்பட்ட இந்த பாண்டியன் ரயில் வண்டி இன்றும் அதே போல பல நினைவுகளை தினமும் சுமந்து செல்கிறது.

அதேபோல, கோவைக்கு செல்லும் ப்ளு மவுண்டேன் என்று சொல்லப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் மேற்கு கொங்கு வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம்.

பாண்டியன் எக்ஸ்பிரஸ் சேவையை துவங்கும் போது மதுரை வட்டார மக்கள் மட்டுமல்ல திருநெல்வேலி வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். அந்த காலத்தில் இந்த ரயில் வண்டி பச்சை வண்ணத்தில் இருந்ததாக நினைவு. சென்னை வரும்போது 1970ல் முதன்முதலாக இந்த ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

பாண்டியன் எக்ஸ்பிரசில் எத்தனையோ அரசியல், வணிக, பொருளாதார, சமூக நிகழ்வுகளுக்கு துணையாக இருந்துள்ளது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வகையில் இருந்திருக்கலாம். அதற்கு பின் வைகை எக்ஸ்பிரஸ் பகல் நேரத்தில் துவக்கப்பட்டது.

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்துள்ளது. 

நன்றி: கே எஸ் ராதாகிருஷ்ணன்