பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட பானாசோனிக் எலுகா ரே 800 !

பானாசோனிக் எலுகா ரே 800 பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது என்று தான் கூற வேண்டும்.


இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போன் நேற்றைய தினம் அறிமுகம் செய்யப்பட்டது.  இதை முன்னணி மின் வணிக தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.  


பானாசோனிக் எலுகா ரே 800- ன் சிறப்பம்சங்கள்:


5.5 இன்ச் H.D டிஸ்பிலே கொண்ட இந்த போன் ,(1080x1920 பிக்சல்கள்) 16: 9 விகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் காட்சி அளிக்கின்றன. இது 4ஜிபி ரேம் உடன் இணைந்த  Octa-core SoC மூலம் இயக்கப்படுகிறது.  ஆண்ட்ராய்டு 7.0 இயங்கு தளத்தில் இயங்கும் .

கேமராவை பொறுத்தவரையில் 8  மெகா பிக்சல் செல்பி கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.  மேலும் இதன் பின்புறத்தில் 13 மெகா பிக்சல் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும்  இதில் உள்ளது . மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் சேவையும் இதில் உள்ளது.

பானாசோனிக் எலுகா ரே 800 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ச் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள ஸ்மார்ட் போன் விலை  ரூ.9,999 ஆகும்.