டெலிவரி பாயிடம் பணம், பொருட்கள் வழிப்பறி..! கதறி அழுததால் இரக்கம் அடைந்த திருடர்கள்..! வீடியோ உள்ளே!

பாகிஸ்தானில் ஆன்லைனில் வணிகத்தில் பொருட்கள் விநியோகம் செய்யும் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற கொள்ளையர்கள் அவர்ன ஓவென அழுததால் இரக்கப்பட்டு அனுப்பி வைத்த ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.


கராச்சியில் ஒரு வீட்டில் ஆன்லைனில் சில பொருட்கள் ஆர்டர் செய்திருந்தனர். அந்த பொருட்களை ஒரு ஊழியர் வீட்டில் டெலிவரி செய்துவிட்டு மீண்டும் அங்கிருந்து புறப்படத் தயாரானார். அப்போது சம்பவ இடத்திற்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அந்த ஊழியரிடம் பணம் உள்ளிட்டவற்றை அபகரித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் பயத்தில் ஓவென அழுகத் தொடங்கினார். இதனால் அந்த மர்மநபர்கள் திகைத்தனர்.

தான் வறுமையில் இருப்பதாகவும் இந்த வேலை செய்ததுதான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் அந்த கொள்ளையர்களிடம் கூறி உள்ளான். இதனால் இரக்கம் அடைந்த அவர்கள் அவனிடம் பறித்த பணம், பொருட்களை மீண்டும் திரும்ப ஒப்படைத்தனர். மேலும் அந்த ஊழியரை கட்டித் தழுவி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

இந்த ருசிகர சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை பாருங்கள்.