இந்தியாவின் சந்திராயன் 2க்கு போட்டி! பாகிஸ்தான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாகிஸ்தான் நாடு 2022--ஆம் ஆண்டில் முதல்முறையாக விண்வெளிக்கு வீரரை அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஃபாவத் சௌத்ரி பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராவார்‌. இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் நாடு விண்வெளி வீரரை அனுப்ப போவதாக தகவல் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "2022-ஆம் ஆண்டில் முதல்முறையாக பாகிஸ்தான் நாட்டிலிருந்து விண்வெளிக்கு வீரர் செல்ல உள்ளார்.

இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தொடங்கவுள்ளது. விண்வெளிக்கு செல்வதற்கான நபரை தேர்ந்தெடுப்பதற்கு முதலில் 50 பேர் கொண்ட லிஸ்ட் தயாரிக்கப்படும். அவர்களுள் அடுத்த சுற்றுக்கு 25 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களிலிருந்து 10 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சிகள் 10 பேருக்கும்  வழங்கப்படும். அந்த பயிற்சியில் முதலில் வரும் நபர் விண்வெளிக்கு செல்வதற்கு தகுதியானவராவார்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவமானது பாகிஸ்தான் நாட்டை அறிவியல் ஆராய்ச்சிகளில் அடுத்த படிக்கு கொண்டு செல்லும் என்று அந்நாட்டின் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.