உலக கோப்பையை பாகிஸ்தான் வெல்லும்! கங்குலி கூறும் பகீர் காரணம்!

நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் பலம் வாய்ந்த அணிகளில் பாகிஸ்தான் அணி முக்கிய அணியாக விளங்கும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.


இந்த மாதம் இறுதியில் இங்கிலாந்தில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த தொடரில் பாக்கிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் எனவும் மற்றும் பலம் வாய்ந்த அணிகளில் பாக்கிஸ்தான் அணிக்கு நிச்சயம் இடம் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் பாக்கிஸ்தான் அணி 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற T 20 உலகக்கோப்பையில் கோப்பையை கைப்பற்றியது.

மேலும் 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் இறுதி போட்டியில் இந்திய அன்யோயை அபாரமாக வென்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றிகளை பார்க்கும் போது மற்ற அணிகளை விட பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடும் என எண்ணுவதாகும் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டிகளிலும் பாகிஸ்தான் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியை வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என கூறிய கங்குலி, ipl தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி மோசமான தோல்வி தழுவினாலும், அந்த தோல்விகள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காது எனவும் கங்குலி கூறியுள்ளார்.