பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் ! மோடியிடம் கெஞ்சும் இம்ரான் கான்! இந்தியாவின் பதிலடி பீதியில் பாக்.,!

நடந்தது நடந்துவிட்டது தயவு செய்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நமது பிரதமர் மோடியிடம் கெஞ்சும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.


இந்தியாவிற்குள் இன்று காலை திடீரென நுழைந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. பதிலடி கொடுத்துவிட்டு திரும்பிய இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் போர் விமானம் தாக்கி அழித்தது.

இதனை தொடர்ந்து பதிலடி கொடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. 465இதனால் பாகிஸ்தான் பீதியில் உள்ளது. இந்த நிலையில் இம்ரான் கான் வீடியோ மூலம் உரையாற்றினார்.

அந்த உரையில் இம்ரான் கான் கூறியிருப்பதுஇந்த நிலையில் இம்ரான் கான் வீடியோ மூலம் உரையாற்றினார். அந்த உரையில் இம்ரான் கான் கூறியிருப்பது:

இந்தியா தான் முதலில் எங்கள் எல்லைக்குள் நுழைந்தது. எங்களாலும் இந்திய எல்லைக்குள் நுழைய முடியும் என்று காட்டத்தான் எங்கள் விமானப்படை இந்தியாவுக்குள் நுழைந்தது.

நாங்கள் ராணுவ நிலைகள் எதையும் குறிவைக்கவில்லை. இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று எங்கள் விமானப்படை கவனமாக செயல்பட்டது. போர் வேண்டாம் என்பது தான் பாகிஸ்தான் நிலைப்பாடு.

போர் என்று ஒன்று ஆரம்பமானால் அதன் முடிவு என் கையிலும் கிடையாது, மோடியின் கையிலும் கிடையாது. போர் ஆரம்பமானால் அதனை நானும் கட்டுப்படுத்த முடியாது, மோடியும் கட்டுப்படுத்த முடியாது.

தற்போதும் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தான் பிரச்சனையை தீர்க்க முடியும்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை கொடுத்தால் விசாரணைக்கும் பாகிஸ்தான் தயாராக உள்ளது. எனவே இந்தியா பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு இம்ரான் கான் அந்த வீடியோவில் பேசியுள்ளார். தற்போது பாகிஸ்தான்மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையில் உள்ளது. மேலும் அந்நாட்டின் அன்றாட செலவுகளுக்கு கூட கையில் பணம் இல்லை.

இந்த நிலையில் போர் என்று ஒன்று வந்தால் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் பின்தங்கிவிடும் என்பதால் தான் இம்ரான் கான் இவ்வளவு பிரச்சனைக்கும் பிறகும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.