36 ஆண்டுகால கபில் தேவ் சாதனை! அடித்து நொறுக்கிய பாகிஸ்தான் வீரர்! என்ன தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல் ரவுண்டரான கபில் தேவின் சாதனையை பாகிஸ்தானின் இளம் வீரர் இமாம் உல் ஹக் முறியடித்துள்ளார்.


இமாம் உல் ஹக் தனது 23 வயதில் இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் 135 பந்துகளில் 151 ரன்களை குவித்தார். இதன் மூலம் பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்  குறைந்த வயதில் அதிவேகமாக 150 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை  பெற்றுள்ளார். மேலும் இந்த சாதனையின் மூலம்  இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

கபில் தேவ் தனது 24 வயதில் ஒரு நாள் போட்டியில் 175 ரன்களை குவித்தார். இதன் மூலம் கபில் தேவின் சாதனையை 36 வருடத்திற்கு பிறகு பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய பாக்கிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை குவித்தது.

இமாம் உல் ஹக் 151 ரன்களை குவித்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 46 வது ஓவரில் இலக்கை அதிரடியாக எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியின் பரிஸ்டோவ் சதாமார்ஹிட்டு இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.