முதலில் கற்பழிப்போம்! பிறகு விற்றுவிடுவோம்! 45 சிறுமிகளை சீரழித்த கணவன்! மனைவி! நாடே அதிர்ச்சியில் உறைந்த சம்பவம்!

பாகிஸ்தான் நாட்டில் 45க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது அதை வீடியோவாக பதிவு செய்து விற்பனை செய்த அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகி உள்ளது.


பாகிஸ்தானின் ராவல்பிண்டி எனுமிடத்தில் வசித்து வந்த தம்பதி மீது ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ராவல்பிண்டியில் வசித்து வந்த குடும்ப நண்பர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதை அவரது மனைவியே வீடியோவில் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி அந்த வீடியோவை வைத்து பலமுறை தன்னை மிரட்டி பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அந்த வீடியோக்களை வெளிநாடுகளுக்கும் விற்பதும் ஆபாச இணையதளங்களில் பதிவு செய்யும் வேலையையும் செய்து வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் புகார் அளித்த தம்பதியை கைது செய்தனர்.

பின்னர் அவர்களது செல்போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை ஆய்வு செய்தபோது அதில் 45க்கும் மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள், நிர்வாணப் புகைப்படங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த தம்பதியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் பலர் இருந்தால் தயங்காமல் வந்து புகார் அளிக்குமாறும் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.

இது குறித்து அடிப்படையில் ஆபாச வலைதளங்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து விதமான பாலியல் குற்றங்களும் ஏற்படுவதற்கு இதுபோன்ற வலைதளங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட காவல்துறை நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாருடன் பெண்கள் பழகினாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி தங்களின் மானத்தை இழந்து விடக்கூடாது எனவும் தெரிவித்தனர்.

லட்சக்கணக்கில் பணம் தருவதாகவும், இந்த விஷயம் யாருக்கும் தெரியாது என சில கயவர்கள் கூறுவதை நம்பி சில பெண்கள் ஏமாந்து விடுவதால் பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வரும்போது தலை குனிந்து சமுதாயத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாட்டில் ஒரு இளைஞர் 600 பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். நிர்வாணமாக வீடியோ அனுப்பினால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என இளைஞர் கூறியதை கேட்டு 600 பேர் ஏமாந்துள்ளனர். எந்த நிறுவனமும் எந்த வேலைக்கும் நிர்வாண புகைப்படங்கள், வீடியோ கேட்காது என்று பெண்களுக்கு தெரியாதா என நெட்டிசன்கள் கேலி செய்கின்றனர்.