பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்றையதினம் வழங்கப்பட்டது.
பிரபல நடிகை கொடூர கொலை! சகோதரர் வெறிச் செயல்! அதிர வைக்கும் காரணம்! நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு!
நடிகை குவான்டீல் பலூச் எப்பவுமே சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருபவர் . சொல்லப்போனால் இந்த சர்ச்சை கருத்துக்களின் மூலம் தான் இவர் மிகவும் பிரபலமானார் என்றே கூறலாம். இவருடைய இயற்பெயர் பவுசியா அசிம் என்பதாகும்.
உலக கோப்பை டி20 போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் , தான் நிர்வாண நடனம் ஆட தயாராக இருப்பதாக நடிகை தகவல் வெளியிட்டிருந்தார். இதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனான அப்ரி டிக்கு ஒரு சிறப்பு சலுகையும் அறிவித்திருந்தார் .
அதாவது ஒருவேளை பாகிஸ்தான் அணி அபார வெற்றி அடைந்தால் அவர் என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார் என்று சமூக வலைத்தளத்தில் தகவலை தகவலை வெளியிட்டிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்திய கிரிக்கெட் அணி இடம் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதனை அடுத்து மிகவும் ஆத்திரம் அடைந்த நடிகை குவான்டீல், பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிடி கண்டபடி திட்டி வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் மிகவும் சர்ச்சையை கிளப்பி வைரலாக பரவியது.
நடிகை குவான்டீல் எப்போதுமே இம்மாதிரியான பல சர்ச்சை கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டவர் ஆவார். இந்நிலையில் 26 வயதான நடிகை நடிகை குவான்டீல் கடந்த 15-7-2016 ஆம் தேதி பஞ்சாபிலுள்ள தன்னுடைய வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தார் . இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில் சமூக வலைத்தளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு குடும்ப கவுரவத்தை சீர்குலைத்ததால் ஆத்திரத்தில் நடிகை குவான்டீல், சகோதரர் முஹம்மது வாசிம் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் கூறினர்.
இதனையடுத்து முல்தான் நீதிமன்றம் 35 சாட்சிகளிடம் இந்த வழக்கை பற்றிய விசாரணை மேற்கொண்டு நேற்றையதினம் இறுதி தீர்ப்பை வழங்கியது. குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி இம்ரான் ஷபி. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட குவான்டீல் பலூச்சின் மற்றொரு சகோதரர் மற்றும் சிலரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இன்னமும் இதுபோன்ற கௌரவக் கொலைகள் ஆணவக்கொலைகள் நாம் வாழும் இந்த உலகில் நடைபெற்று வருகிறது என்று நினைக்கும்போது பெரும் சோகத்தை அளிக்கிறது.