தந்தையின் தலையை துண்டித்த கொடூர மகன்! வீடியோ கேம் விளையாடிய போது இன்டர்நெட்டை துண்டித்ததால் பயங்கரம்!

பப்ஜி கேம் விளையாடியதை கண்டித்ததால் மகன் தந்தையை கொன்ற சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலத்தில் பெலகாவி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இங்கே சங்கர் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாவார். இவருடைய மகனின் பெயர் ரகுவீர் குமார். ரகுவீர் குமாருக்கு பப்ஜி விளையாட்டில் அதிக மோகம் உள்ளது.

இதனை சங்கர் குமார் நிறைய முறை கண்டித்துள்ளார். ஆனால் ரகுவீர் தந்தையின் அறிவுரைப்படி நடக்கவில்லை. ஆத்திரமடைந்த சங்கர் குமார் தன் மகனிடமிருந்த செல்போனை பறித்து இன்டர்நெட் சேவையை முடக்கினார்.

இதனால் ரகுவீர் கடுமையாக ஆத்திரம் அடைந்துள்ளார். குடும்ப உறுப்பினர்களை வீட்டின் அறைகளில் பூட்டி வைத்துள்ளார். மேலும் தந்தை என்றும் பாராமல் சங்கர் குமாரின் உடலை 3 பாகங்களாக அறுத்து கொலை செய்துள்ளார்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சங்கர் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரகுவீர் குமார் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதால் காவல்துறையினர் நூதனமான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது பெலகாவி மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.