மாணவனை பிரம்பால் வெளுத்த ஆசிரியர் - காவல் நிலையத்தில் திடுக் சம்பவம்

வகுப்பிற்கு வராமல் விளையாட சென்ற மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடித்த சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டம் சி.எஸ்.ஐ உதவி பெறும் அரசுப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் முகமது அனஸ் என்ற 8-ஆம் வகுப்பு மாணவர் படித்து வந்தார்.  வகுப்பிற்கு செல்லாமல் சில நண்பர்களுடன் முகமது மைதானத்தில் விளையாடி வந்துள்ளார். மாணவர்கள் படிப்பில் இல்லாததை கண்ட தலைமை ஆசிரியர் கடும் கோபமடைந்துள்ளார். உடற்பயிற்சி ஆசிரியருடன் மைதானத்திற்கு சென்றார். மாணவர்களை உடற்பயிற்சி ஆசிரியர் பிரம்பால் பலமாக தாக்கியுள்ளார். 

முகமது அனஸை பிரம்பால் அடித்ததில் அவருடைய தொடை பகுதி வீக்கம் அடைந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த மாணவனின் தந்தை அடித்த உடற்பயிற்சி ஆசிரியருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஆனால் காவல்துறை அதிகாரி அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.