வேல்முருகனை கொலை செய்ய ராமதாஸ் உத்தரவு! சற்று முன் வெளியான திடுக் புகார்!

பாமகவினர் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் எனக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வருகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக வேல்முருகன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல முறை டிஜிபியிடம் புகார் அளித்தும் பாதுகாப்பு வழங்கவில்லை. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாஹூ விடம் புகார் அளித்து பலனில்லை. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது

அரியலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொண்டர்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். நான் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள முடியாமல் தடுக்க பார்க்கிறார்கள். தொடர்ந்து எந்த பிரச்சினை வந்தாலும் பாஜக கூட்டணியையும் பாமகவையும் எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்.

என்னை கொலை செய்ய ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். என் உயிருக்கு பாமகவினர் குறி வைத்துள்ளனர். ஆனால் இதற்கு எல்லாம் நான் பயப்படப்போவதில்லை என்று அவர் கூறினார்