கணவனை இழந்து வீட்டில் தனிமையில் இருந்த பாமக மகளிர் அணி தலைவிக்கு நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!

அரக்கோணம் பகுதியில் பா.ம.க மகளிரணி தலைவி இரவோடு இரவாக தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்னகைனுாரைச் சேர்ந்தவர் நிர்மலா 42 , இவர் அப்பகுதியில் பா.ம.க மகளிர் அணி தலைவியாக உள்ளார்.இவரது கணவர் இறந்த நிலையில் அவர் தனது பாட்டி படவேட்டம்மாளுடன் வீட்டில் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து நிர்மலா மற்றும் அவரது பாட்டியை பலமாக தாக்கி உள்ளனர்.

அவர்களிடம் இருந்து நகை ,பணம் மற்றும் வீட்டுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் முதலியவற்றை திருடிச் சென்றுள்ளனர். காலை நிர்மலா வீட்டிலிருந்து யாரும் வெளியே வராத நிலையில் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது நிர்மலாவின் தலையில் அம்மிக்கல்லைப்போட்டுள்ளனர்.

பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். மற்றும் அவரது பாட்டி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிர்மலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது பாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் பா.ம.க தலைவிக்கு விரோதிகள் யாரேனும் உள்ளனரா அல்லது திருட்டுச் சம்பவம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? என போலீசார் சந்தேகத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.