1 தொகுதிக்கு ரூ.100 கோடி பட்ஜெட்! ராமதாஸ் திடுக் தகவல்!

வேலூர் மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அரக்கோணம் பாராளுமன்ற பாமக வேட்பாளர் ஏ கே மூர்த்தியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்


பிரச்சாரத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள்,

ஒருத்தர் தலை நிமிர்ந்து செல்கிறார் என்றால் அவர் அதிமுக கூட்டணி, அதே ஒரு நபர் தலை குனிந்து சென்று இருக்கிறார் என்றால் அவர் திமுக கூட்டணியை சேர்ந்தவராக தான் இருப்பார். 

தமிழகத்தில் அதிக வாக்கு பெற்றவர்கள் பெண்கள், அவர்கள் மூன்று ஆக்கும் காக்கும் அழிக்கும் சக்திகள் கொண்டவர்கள், அவர்கள் நினைத்தால் எதையும் மாற்ற வல்லவர்கள், 

அதிமுக கூட்டணி தெளிந்த நீவோடை அதில் இருக்கும் நீரை எடுத்து எடுத்து குடிக்கலாம், ஆனால் திமுக கூட்டணி தேங்கி கிடக்கின்றன குட்டை தண்ணீ, 

நான் டாக்டராக இருந்தாலும் விவசாயத்தை விடாமல் செய்தவன். 

தேர்தல் அறிக்கையில் சொல்லிருக்கின்ற  வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் அதிமுகாவை நினைவுப்படுத்திக்கொண்டு இருப்போம் . 

நாங்கள் அறிவித்த தேர்தல் அறிக்கையிலிருந்து திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் 60% சதவீதம் காப்பி அடித்தனர். இன்றைய தேர்தல் அறிக்கையை எங்களை பார்த்து 90% காப்பி அடித்து உள்ளனர் அதனை நான் அடித்து சொல்ல முடியும்.மீதமுள்ள 10சதவித வாக்குறுதி தவறானது என தெரிவித்தார் மேலும் பேசிய அவர்

 நலிவுற்ற மக்களுக்கு மாதமாதம் 1500 கொடுக்க சொல்லி இருக்கிறோம், விவசாய கடன் தள்ளுபடி, நீட் தேர் ரத்து அனைத்தும் நாங்கள் நிறைவேற்ற போராடுவோம். 

18 ஆண்டுகள் திமுக மத்தியில் கூட்டணியில் ஆட்சியில் இருந்தார்கள் மக்களுக்காக போராடவில்லை அவர்களுக்கு வேண்டிய நல்ல இலாகா பெற போராடினார்கள். அதே போல் இளைஞர்கள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் வேலையில்லாதவர்களுக்கு மாதம் 2000 வழங்க முடிவு செய்து உள்ளோம்..

100 ஆண்டு காலம் ஒரு குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் இன்றும் இருக்கிறது அவர்களால் எப்படி மத்தியில் ஆட்சி செய்ய முடியும் அதே போல் தான் தமிழகத்தில் திமுகவும் இருக்கின்றது. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு அதிமுக 37 தொகுதியில் வெற்றி கண்டது இரண்டு தொகுதிகள் தவிர்த்து இப்பொது 40 தொகுதியில் வெற்றி கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

அண்ணா கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஏழையாகவே வாழ்த்து மறைந்தார். ஆனால் இப்பொது இருக்கிற திமுக 100 கோடி கூட ஒரு தொகுதிக்கு செலவு செய்வார்கள் அவர்கள் ஏழையை வளர்க்க மாட்டார்கள் ஏழை ஒழிக்க தான் செய்வார்கள் திமுக.

இன்றைக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கின்றனர். அதனால் தான் மறைந்த முதலவர் ஜெயலலிதா பெண்கள் பாதுகாப்புகாக புதியதோர் 1.1.2013 அன்று ஆணை பிறப்பித்தார். அது போல வருகின்றனர் நாட்களில் தமிழக  முதலவர் ஏ டி ஜி பி தலைமையில் 3 SP கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஒன்றினைத்து ஒரு புது நிர்வாகத்தை பெண்கள் பாதுகாப்புகாக அமைக்க ஆணை பிறப்பிக்க உள்ளார். 

அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி.அந்த பாதுகாப்பு திமுக கூட்டணி கட்சிகளில் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியை மறைமுகமாக சாடினார்

இப்பொது அரக்கோணம் பாராளுமன்றத்து நிற்க்கவைக்கபட்டுள்ள ஏ கே மூர்த்தி க்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறி தனது உறையை முடித்தார்...