அதிமுகவின் மாசி மகம் பெளர்ணமி கூட்டணி! பா.ம.க. அள்ளிக்கிச்சு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

எப்போது யாருடன் கூட்டணி வைத்தாலும் முதல் ஆளாக முன்வந்து சீட் அள்ளிக்கொள்ளுவார் ராமதாஸ். இன்றும் அதுதான் நடந்துள்ளது.


எந்தக் கூட்டணியில் ராமதாஸ் சேர்வார் என்பதுதான் இன்று காலை வரையிலும் கடும் பஞ்சாயத்தாகப் போய்க்கொண்டு இருந்ததுஇதற்கு விடை கொடுப்பது போல் திடீரென சென்னை ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் பா...வுடன் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது.


எப்போது கூட்டணியில் சேர்ந்தாலும் முதல் ஆளாக சீட் அள்ளிக்கொள்ளும் ராமதாஸ் இந்த முறையும் முந்திக்கொண்டார்.  அதன்படி பாமகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


தில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால்இடைத் தேர்தலில் பா..எந்தத் தொகுதியிலும் போட்டியிடாதுஅத்தனை தொகுதியிலும் பா..முழு ஆதரவை அளிக்கும் என்பதுதான்.


எப்போதும்போல் கூட்டணி மாற்றத்தை மக்கள் காறித் துப்புவார்கள் என்பதால்கையோடு பத்து நிபந்தனைகள் விதித்திருக்கிறார் ராமதாஸ்.


1. காவிரிபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்.
2. 
தமிழ்நாட்டின் 20 பாசனத் திட்டங்கள். & கோதாவரிகாவிரி இணைப்புத் திட்டம்
3. 
இடஒதுக்கீட்டை காக்க சாதிவாரிக் கணக்கெடுப்பு.
4. 
ஏழு தமிழர்கள் விடுதலை.
5. 
படிப்படியாக மதுவிலக்கு.


6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூடல்.
7. 
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.
8. 
காவிரியில் மேகதாது அணைக்கு தடை.
9. 
வேளாண் கடன்கள் தள்ளுபடி உழவர் ஊதியக்குழு அமைத்தல்
10. 
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.


வழக்கம்போல்இதுதான் வெற்றிக் கூட்டணி என்று சொல்லியிருக்கிறார் ராம்தாஸ். இத்தனை சீக்கிரம் கூட்டணி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்காத ஸ்டாலின் டென்ஷனாகி மானம் இருக்கிறதா, ரோஷம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதெல்லாம் அரசியலுக்கு எதுக்கு என்பது ஸ்டாலினுக்கே தெரியும்.