புதியதலைமுறை டிவியில் இனி பாமக அன்புமணி செய்திகள் வராது!

தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் முன்னணியில் உள்ள புதிய தலைமுறையில் இதில் பாமக செய்திகள் எதுவும் ஒளிபரப்பாகாது.


சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக விவகாரத்தில் பாமக மற்றும் புதிய தலைமுறை நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் உள்ள பாரிவேந்தர் இடையே மோதல் நீடித்து வருகிறது. எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக பாமக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கால் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரிக்கு மிகப்பெரிய சிக்கல் நிலவிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் பாமக உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு தான்.

தேர்தல் விதி போன்ற பல விவகாரங்களில் பாமகவிடம் முன்பு காட்டிய தரிசனத்தை தற்போது புதிய தலைமுறை வேந்தரும் எஸ்ஆர்எம் காட்டாங்குளத்தூர் கல்லூரியின் தலைவருமான பாரிவேந்தர் தற்போதும் காட்டவில்லை என்பதால் தான் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் புதிய தலைமுறை டிவியில் தொடர்ந்து பாமக விற்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பாகி வந்தது.

தங்களைப் பற்றி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் உள்நோக்கத்துடன் செய்து ஒளிபரப்பாவதால் வந்த தொலைக்காட்சிகள் தங்களைப் பற்றி செய்தி ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் பாமக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பாமக தொடர்பாக எந்த செய்தியும் புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால்தான் பாமக தொடர்பான எந்த செய்திகளும் இனி புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகாது