வாங்கும் சம்பளத்தை எல்லாம் வாரிக் கொடுக்கும் மோடி! யாருக்கு தெரியுமா?

பிரதமர் மோடி தன்னலமற்ற சேவகர் என்பதை விளக்க பிரதமர் அலுவலகம் அவர் யார் யாருக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.


கடந்த மாதம் பிரயாக் ராஜ் கும்பமேளா விழா தூய்மைப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 பேருக்கு ஸ்வச் கும்ப் ஸ்வச் ஆபார் விருதை வழங்கிய பிரதமர் மோடி அவர்களது கால்களை கழுவி சுத்தம் செய்தார். லட்சக்கண்க்கானோர் கூடிய பகுதிகலை சிரத்தையுடன் தூய்மைப்படுத்திய துப்புரவுத் தொழிலாளர்களை கர்ம யோகிகள் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். 

இந்நிலையில் அவர் தனது சொந்த சேமிப்பில் இருந்து கும்பமேளா துப்புரவுத் தொழிலாளர்  நல நிதிக்கு 21 லட்சம் ரூபாய் கொடுக்க இருப்பதாக பிரதமர் அலுவலக டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் அவர் பெற்ற சியோல் அமைதி விருதுடன் வழங்கப்பட்ட பரிசுத் தொகையான 1 கோடியே 30 லட்சம் ரூபாய் கங்கைத் தூய்மைத் திட்டத்துக்கு வழங்குவதாக அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமராக அவர் பதவியேற்றதில் இருந்து பெற்ற நினைவுப் பரிசுகள் அண்மையில் ஏலம் விடப்பட்டதாகவும் அதில் கிடைத்த்த 3 கோடியே 40 லட்சம் ரூபாயையும் அவர் கங்கைத் தூய்மைத் திட்டத்துக்கு வழங்குவதாக அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே அவர் பெற்ற பரிசுகளை ஏலம் விட்ட போது கிடைத்த 8 கோடியே 33 லட்சம் ரூபாயும் கங்கைத் தூய்மைத் திட்டத்துக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குஜராத் முதலமைச்சராக தனது பதவிக் காலத்தில் அவர் தனது சொந்த சேமிப்புப் பணமான 21 லட்சம் ரூபாயை மாநில அரசு ஊழியர்களின் மகள்களின் கல்வி நிதிக்காக வழன்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது 

குஜராத் முதலமைச்சராக இருந்த போது தனக்கு வந்த பரிசுகள அனைத்தையும் ஏலம் விட்டு 89 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதி திரட்டியதாகவும் அதனையும் அவர் பெண் குழந்தைகளின் கல்வி நிதிக்கு வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனக்கு வழங்கப்பட்ட ஊதியங்களையும் கூட மோடி நன்கொடையாக பிறருக்கு அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.