அமித் ஷா தான் எல்லாம்! நான் கூட சும்மா தான்! செய்தியாளர்களை அதிர வைத்த மோடி!

பாஜக தலைவர் அமித்ஷா தான் எல்லாம் என்றும் அவர் சொல்வதை கேட்டு நடக்கக்கூடிய ஒரு ராணுவ வீரன் தான்தான் என்றும் மோடி கூறி செய்தியாளர்களை அதிர வைத்தார்.


டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி இன்று திடீரென வருகை தந்தார். கலையிலேயே பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. எனவே மோடியும் பாஜக தலைமை அலுவலகம் வந்ததால் அவர் தான் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக பரபரப்பு பற்றிக் கொண்டது.

ஏனென்றால் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் தற்போது வரை கடந்த ஐந்து வருடங்களில் ஒரு முறை கூட செய்தியாளர் சந்திப்பு நடத்தியது இல்லை. கடந்த காலங்களில் பிரதமராக இருப்பவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் போதும் அங்கிருந்து திரும்பி வரும்போதும் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பது வழக்கம். ஆனால் மோடி பிரதமரான பிறகு இந்த வழக்கமும் கூட முடித்து வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் துவங்கும் நாளில் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய கருத்தை கூறி விட்டு பிரதமர் மோடி நடையைக் கட்டி விடுவார்.

இதுநாள் வரை எந்த செய்தியாளர் சந்திப்பிலும் மோடி கலந்து கொண்டதில்லை எந்த செய்தியாளரும் மோடியை கேள்வி கேட்டதும் இல்லை. இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடைந்த நிலையில் மோடி செய்தியாளர்களை சந்திக்க உள்ளதால் அவரிடம் கேட்பதற்கு கேள்விகளுடன் செய்தியாளர்கள் தயாராகினர்.

செய்தியாளர் சந்திப்பில் வந்து அமர்ந்த பிரதமர் மோடி தான் கூற வேண்டியதை வரிசையாக கூறி முடித்தார். அதன் பிறகு மோடி பேசியது தான் செய்தியாளர்களை அதிர வைத்தது. இந்த செய்தியாளர் சந்திப்பு பாஜக தலைவர் என்ற முறையில் அமித்ஷா ஏற்பாடு செய்தது. எனவே செய்தியாளர்களின் கேள்விக்கு பாஜக தலைவர் என்ற முறையில் அமித்ஷா தான் பதிலளிக்க முடியும். பாஜக ஒரு ராணுவக் கட்டுப்பாடு உடைய கட்சி. அந்த வகையில் பாஜக தலைவர் பேசும்போது கட்சியின் தொண்டனாக தான் அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்று கூறிவிட்டு அருகாமையில் அமைதியாக அமர்ந்திருந்தார் மோடி.

மோடி இப்படிக் கூறியதும் செய்தியாளர்கள் பலரும் அதிர்ந்து போயினர். ஏனென்றால் மோடியை கேள்வி கேட்க தயாராக வந்தவர்கள் அமித்ஷாவிடம் தான் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறிய பிறகு அதிர்ச்சி அடையாமல் என்ன செய்வார்கள். என்னதான் பாஜகவின் தலைவராக அமித்ஷா இருந்தாலும் அவரை அந்தப் பதவிக்கு கொண்டு வந்தது மோடிதான் என்று உலகறிந்த உண்மை.