காலில் பொத் என விழுந்த ஓபிஎஸ் மகன்! அதிர்ச்சியில் மோடி செய்த செயல்! வைரல் புகைப்படம்!

தேனி பொதுக்கூட்டத்தில் தன் காலில் விழுந்த் வேட்பாளர்களை, பிரதமர் மோடி தடுத்துநிறுத்தினார்.


தூத்துக்குடியில் கட்சி மேலிடத் தலைவர்கள் வராமல் தமிழிசை ஒத்தைக்கு ஒத்தையாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் (பலி கடா ?) துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு வாக்குச் சேகரிக்க பிரதமர் மோடி தேனிக்கு வந்துவிட்டார். 

தொகுதி வேட்பாளர் என்ற முறையில் பிரதமருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்ற ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் யாரும் எதிர்பாராத நிலையில் பிரதமரின் காலில் விழுந்தார். தமிழகத்தின் எண்ண ஓட்டங்கள் பிரதமருக்கு தெரியாமலா இருக்கும் ? எனவே அவர் ரவீந்திர நாத் குமாரைத் தடுத்தார்.

ஆனால் அந்த அரசியல் தமிழக வேட்பாளர்களுக்குப் புரியாத நிலையில் ரவீந்திரநாத் குமாரைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள், மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் பொத்து பொத்தென்று பிரதமரின் காலில்விழப்போனார்கள் அவர்களையும் பிரதமர் தடுத்தார். 

பணிவு, பவ்யம் என்ற குணாதிசயஙகளுடன் காலி விழும் கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்த ஓ.பி.எஸ். தற்போது வளர்ந்து விட்ட நிலையில் அவரது மகன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க தொடங்கியுள்ளார். தேனி கூட்டத்தில் நடந்ததை பார்த்தால், இதற்கு முன் பார்த்தை சம்பவங்கள் கண் முன்னால் வந்து செல்வதாக மக்கள் பேசியதைக் கேட்க முடிந்தது.