எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டு மக்களுக்கு தான்! மோடி திடீர் உருக்கம்!

நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் இருக்கிறோம். செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி, தமிழ் மொழி மிக அழகானது - பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு‬


ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் நகரங்களை இணைத்து, பயண நேரங்களை குறைக்கும் - பிரதமர் மோடி

தமிழகத்திற்கு வரும் விமானங்களில் இனி தமிழில் அறிவிப்பு வெளியாகும் - பிரதமர் நரேந்திர மோடி.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்

காஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களில் அறிவிப்புகளை தமிழிலேயே அறிவிக்க  முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

காஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கம்; தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பிரதமர் மோடி

பாகிஸ்தானிலிருந்து அபிநந்தனையும், இலங்கையில் சிக்கிய 1900 தமிழக மீனவர்களையும் நாங்கள் மீட்டு கொண்டுவந்துள்ளோம்: பிரதமர் பிரதமர் மோடி பேச்சு

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மத்திய அரசு சார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் - பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை ‘

தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள் 

காங்கிரசால் மாநில நலன்களை பூர்த்தி செய்யமுடியாது; ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம் பிரதமர் மோடி

JUSTIN நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகள் அலட்சியம் காட்டிவருகின்றன; வலிமையான ராணுவத்தை அவர்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி

முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுவதில்லை; நாட்டு மக்களே உச்சபட்ச கமாண்டர்கள் - பிரதமர் மோடி

சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை எதிர்த்ததால் காமராஜரை, காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது - பிரதமர் மோடி

மத்திய அரசு நடவடிக்கையால் இலங்கை சிறையிலிருந்து 1900 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் - பிரதமர் மோடி

யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றேன்; தமிழர்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் மத்திய அரசு உடனடியாக உதவி செய்து வருகிறது - பிரதமர் மோடி

மண்ணின் மைந்தர் பாரத ரத்னா எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் -  பிரதமர் மோடி

"நாற்பதும் நமதே, நாடும் நமதே" என தமிழில் உரையை முடித்தார் பிரதமர் மோடி.