106 நாட்கள் திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம் ஜாமீனில் வெளியேறிய பிறகு கூறிய வார்த்தைகள் தான் தற்போது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளன.
106 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த ப.சிதம்பரம் கூறிய முதல் வார்த்தை..! என்ன தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பசிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது- பிறகு அதே வழக்கில் பண மோசடி என்று கூறி அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்தது. வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் விசாரணையும் நடத்தின.
இப்படியாக சுமார் 106 நாட்கள் ஓடிய நிலையில் உச்சநீதிமன்றம் தற்போது ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ப.சிதம்பரம் ஜாமினில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று கூறுவதற்க ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். அதே சமயம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிதம்பரம் பேட்டி கொடுக்க தடை விதித்தது.
இந்த நிலையில் காலையில் ஜாமீன் கிடைத்த நிலையில், நடைமுறைகள் அனைத்தும் முடிந்து இரவு எட்டரை மணி அளவில் திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்தார். அப்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஐஎன்எக்ஸ் வழக்கு குறித்து பேசப்பேவதில்லை என்றார்.
அதே சமயம் தான் 106 நாட்கள் சிறையில் இருந்த நிலையிலும் விசாரணை நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் ஒரு குற்றச்சாட்டை கூட பதிவு செய்ய முடியவில்லை என்று கூறிவிட்டு ப.சிதம்பரம் புறப்பட்டார்.