7 வருடத்திற்கு முன் மாயமான மன்னர்! பாபநாசம் பட பாணியில் மாமியார் - மருமகன் சேர்ந்து செய்த பகீர் சம்பவம்! அதிர்ச்சியில் போலீஸ்!

தோட்டத்திலிருந்த விவசாயியை புதைத்த குற்றத்திற்காக தோட்டத்து உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது சிவகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சிவகிரி எனும் இடத்தில் மன்னர் என்ற 39 வயது விவசாயி வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் மேரி. அதே ஊரில் மிராசுதாராக இருந்த பன்னீர்செல்வத்தின் தோட்ட வேலைகளை மேற்பார்வை பார்த்து வந்தார். 2012-ஆம் ஆண்டில் திடீரென்று ஒருநாள் மன்னர் மாயமானார். சில நாட்கள் காத்திருந்த அவருடைய மனைவி அவர் கிடைக்காத விரக்தியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

2018-ஆம் ஆண்டில் சென்னை உச்சநீதிமன்றத்தில் மேரி ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இதனை திருநெல்வேலி அரசு புலனாய்வு மற்றும் குற்றத்துறை காவல்துறையினருக்கு வழக்கை மாற்றினார்.

கடந்த ஓராண்டாக காவல்துறையினர் மிகவும் சிரமப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதாக சென்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கொண்டு மன்னர் உயிரிழந்தார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மேலும், தோட்டத்து உரிமையாளரான பன்னீர்செல்வம் அவருடைய மனைவி பாப்பா, மற்றும் அவருடைய மகன் மன்னரை தங்களுடைய தோட்டத்திலேயே வைத்து புதைத்துள்ளனர். நடிகர் கமலஹாசன் நடித்த "பாபநாசம்" என்னும் படத்தில் ஏற்பட்ட நிகழ்வு போன்றே இந்த நிகழ்வும் அமைந்துள்ளது. யாருக்கும் தெரியாத வகையில் ஊரில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக பன்னீர்செல்வம் சென்ற ஆண்டு இறந்து போனார். தற்போது காவல்துறையினர் பன்னீர் செல்வத்தின் மகன் மற்றும் மனைவி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த சம்பவமானது சிவகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.