விடுதலை சிறுத்தைகளுடன் ஒவைசி கூட்டணியா..? தி.மு.க. கூட்டணி டமால்

தங்கள் கூட்டணி பலமானது என்று ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், பீகாரில் பா.ஜ.க. அணி வெற்றிபெறக் காரணமான அசதுத்தீன் ஒவைசியின் முஸ்லிம் கட்சியுடன், தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இன்றைய நிலையில், சிறுபான்மையினர் ஓட்டுகள் மொத்தமாக தங்களுக்குத்தான் என்று ஸ்டாலின் மார்தட்டி வருகிறார். இதனை உடைப்பதற்கு ஒவைசி தமிழகம் வருவது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைப்படி 42.3 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது மாநில மக்கள் தொகையில் 5.86 சதவீதமாகும். 2021 மக்கள் தொகை கணக்கின்படி இது 6 சதவீதத்துக்கும் மேலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையில் 14.65 சதவீதம், சென்னையில் 9.45 சதவீத இஸ்லாமியர்களும் முஸ்லிம்களும், வேலூரில் 10.08 சதவீத இஸ்லாமியர்களும், நீலகிரியில் 9.54 சதவீத முஸ்லிம்களும் வசிக்கின்றனர். இது தவிர ஈரோடு, விருதுநகர், கள்ளக்குறிச்சி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் 6 முதல் 9 சதவீத முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.

இவர்களின் ஓட்டுக்களை கவரும் எண்ணத்துடன் ஒவைசி தமிழக தேர்தலில் இறங்குவது உறுதியாகியுள்ளது. அவருக்கு கைகொடுக்கும் வகையில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்து வெளியே வரும் என்பது தெரியவந்துள்ளது.

விடுதல சிறுத்தைகளும் ஒவைசி கட்சியும் ஒன்றிணைந்து நின்றால், நிச்சயம் தமிழகத்தில் 20 தொகுதிகளை பெற்றுவிட முடியும் என்ற நிலை இருப்பதால், குறைந்த சீட்டுக்காக தி.மு.க.வில் தொடர்து இருக்கவேண்டுமா என்று திருமாவளவன் யோசித்து வருகிறாராம்.

ஒவைசி தமிழகம் வரும்போது மேலும் சில மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.