அதிக எடையுள்ள குழந்தைகள்

குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும்போது கவலைப்படும் தாய், அதிக எடையும் பிறக்கும் குழந்தையைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள். உண்மையில் அதிக எடையுடன் குழந்தை பிறப்பதும் ஆபத்தாகவே கருதப்படுகிறது.


·         4 கிலோவுக்கு மேல் அதிக எடையுடன் குழந்தை பிறப்பதை மேக்ரோசொமியா என்று அழைக்கிறார்கள்.

·         எடை அதிகமுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது, குழந்தையும் அதிக எடையுடன் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.

·         கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை கட்டுப்பாடுக்குள் வைக்கவில்லை என்றால் குண்டு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.

·         அதிக எடையுடன் குழந்தை இருக்கும்போது நிச்சயம் சிசேரியன் தேவைப்படுகிறது, மேலும் பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு நிரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உண்டாகலாம்.

எடை குறைவான குழந்தைகளைப் போலவே, அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைக்கும் தீவிர கண்காணிப்பு அவசியம். இந்தக் குழந்தைகளையும் நியோனடல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில் Neonatal intensive care unit (nicu)   வைத்து ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும்.