தமிழ் தெரியாவிட்டாலும் தமிழகத்தில் நீதிபதியாகலாம்! TNPSCக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ் தெரியாதவர்களும் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.


தமிழகத்தில் காலியாக உள்ள நீதிபதிக்கான பதவிகளுக்கு தமிழ் தெரியாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி இன்று காலையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பானது வழக்கறிஞர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்தங்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வளாகத்தில் மொத்தம் 13 நீதிமன்றங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினால் வெளிமாநிலங்களிலிருந்து நிறைய பேர் தமிழகத்தில் நீதிபதிகளாக பதவி ஏற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் என்றும் போராட்டம் நடத்தினர். அறிவிப்பை வாபஸ் பெறும் வரை போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆகையினால் நாளையும் போராட்டம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய போராட்டங்களினால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.