பளபளப்பான மேனியழகு தரும் ஆரஞ்சு பழம் !!

ஆரஞ்சு பழத்தில் சுவை இருக்கும் அளவைவிட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. வைட்டமின் சி சத்துக்கள் நிரம்பி வழிவதால் அழகு தரும் பழமாகவும் அறியப்படுகிறது.


·         ஆரஞ்சு பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் உமிழ்நீரை தூண்டச்செய்து பசியைத் தூண்டுகிறது.

·         ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும் தன்மை ஆரஞ்சுக்கு உண்டு என்பதால், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து உடலுக்கு உற்சாகம் தருகிறது.

·         ஆரஞ்சு பழத்தை மேனியில் பூசிக்கொண்டால் கருமை குறைந்து பளபளப்பு உண்டாகிறது. தோல் நோய்களில் இருந்தும் பாதுகாப்பு தருகிறது.