வீடு தேடிச் சென்று விஜயகாந்தை சந்தித்தார் ஓபிஎஸ்!

சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் சந்தித்து பேசியுள்ளார்.


தேமுதிக தொகுதி பங்கீடு குழுவினர் பார்த்தசாரதி அழகபுரம் மோகன்ராஜ் அக்பர் இளங்கோ ஆகியோர் விஜயகாந்த் சந்திக்க அவரது இல்லம் வருகை

நாளை தேமுதிக  அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதால் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்த் சந்திக்க வர உள்ளதாக தகவல்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயகாந்த்தை சந்திக்க வருவது உறுதி

ஓ.பன்னீர்செல்வம் தனது கிரீன்வேஸ் சாலையில் இருந்து விஜயகாந்த் இல்லம் புறப்பட்டார்

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு ஓ.பி.எஸ் சென்றுள்ளார்.

ஓ.பி.எஸ். உடன் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயகாந்த் இல்லத்துக்கு வந்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

நாளை நடைபெற உள்ள தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக உடன் தொகுதி பங்கீடு முடிவு ஆகும் என தகவல். இதனிடையே சந்திப்பின் போது தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று ஓ.பி.எஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்கு கேட்ட தொகுதிகளை கொடுத்தால் நாளையே கூட்டணியை அறிவிக்க தயார் என்று பிரேமலதா கூறியதாக தகவல்கள வெளியாகியுள்ளன.