மகனுக்காக அதிமுகவை பாஜகவிடம் தாரை வார்த்துவிட்டார் ஓபிஎஸ்! தென்மாவட்ட தலைவர் அதிர்ச்சி தகவல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது.


ஆளுமையற்ற தலைவர்களாக ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் உள்ளனர். பாஜகவின் கொத்தடிமைகளாக அதிமுக உள்ளது. திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளோம். 

எனக்கு சீட் தரவில்லை என்பது பிரச்சனை இல்லை. ஆனால் 5 தொகுதிகளில் பாஜகவுக்கு தென் மாவட்டங்களில் 4 தொகுதிகள் கொடுத்தது எனக்கு உடன்பாடு இல்லை. மகனுக்கு சீட் தேவை என்பதற்காக 10 தொகுதிகளை தாரைவார்க்கிறார்கள்.

பாஜக பேச்சை கேட்டு செயல்படுகிறார்கள். மகனுக்கு சீட் வாங்க ஒ.பி.எஸ் கட்சியை தாராவார்த்துவிட்டார். தலைவரக்ள் முன்பே சீட் வாங்க அதிமுகவில் சண்டை நடக்கிறது. நாற்காலியை தூக்கி போட்டு சண்டை எல்லம் நடந்தது.

ஒ.பி.எஸ், ராஜன்செல்லப்பா, சி.வி.சண்முகம் என எல்லோரும் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கேட்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு சீட் கொடுக்கமால் உள்ளனர். சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டால் பிரச்சாரம் செய்வேன்.

எனக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் இடையே அரசியல் போட்டியே தவிர சொந்த பகை இல்லை. இவ்வாறு ராஜ கண்ணப்பன் கூறினார்.