பெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்! நடிகர் ரஜினியின் கருத்துக்கு ஓபிஎஸ் பதிலடி!

தந்தை பெரியாரை குறித்து ரஜினியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பற்றி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.


கடந்த ஜனவரி 14ஆம் தேதி துக்ளக் இதழின் 50வது ஆண்டு நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல பத்திரிக்கையாளர்கள் நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவரது பேசும்பொழுது கடந்த 1971-ல் நடைபெற்ற சில சம்பவங்களைப் பற்றியும் பெரியாரைப் பற்றியும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார். இந்த சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதனையடுத்து பலரும் நடிகர் ரஜினிகாந்தின் மீது போலீசில் புகார் அளித்தனர் .மேலும் அவர் இவ்வாறாக தந்தை பெரியாரைப் பற்றி தவறாக கருத்துக்கள் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். 

இதனையடுத்து ரஜினிகாந்த் தான் பேசியது நிதர்சனமான உண்மை என்றும் அதற்கு வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதனால் தான் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க இயலாது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதைப் பற்றி கட்சி தலைவர்களும் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்து உள்ளனர்.

அவ்வாறாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தந்தை பெரியாரின் கருத்துகள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை அதனை தவறாக பரப்ப வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் , என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைய தந்தை பெரியாரே காரணம். ஆகையால் அவரது கருத்துக்களை முழுமையாக படித்த பின்பு பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார்.