தொண்டர்களால் நாங்கள்! தொண்டர்களுக்காக நாங்கள்! ஜெ. பாணியில் பஞ்ச் டயலாக்கில் கலக்கிய ஓ பி எஸ்!

அதிமுக செயற்குழுவில் "தொண்டர்களால் நாங்கள் தொண்டர்களுக்காக நாங்கள்" என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பானியல் பஞ்ச் டயலாக் பேசினார் ஓபிஎஸ்.


நேற்றைய தினம் அதிமுக கட்சி சார்பில் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்று நடத்திய தந்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சி வானகரத்தில் உள்ள தனியார் திருமணம் ஒன்றில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "தமிழகத்தில் நல்ல அரசியலுக்கான வெற்றிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது " என்றும கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த பேச்சு அதிமுகவை நேரடியாக விமர்சனம் செய்தது போல் இருந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்றையதினம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ், யாராலும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கி தந்துள்ளார். அதிமுகவிற்கு எப்போதுமே வெற்றி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களை கூறலாம்.

அதிமுகவில் எப்போதும் வெற்றியை தவிர வெற்றிடம் கிடையாது என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார். மேலும் பேசியவர் தொண்டர்களால் நாங்கள், தொண்டர்களுக்காக நாங்கள் என்பதை நோக்கமாகக் கொண்டு அதிமுக செயல்பட்டு வருகிறது என்று கூறினார். 

பொதுவாகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்போதும் "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று கூறுவது வழக்கம். தற்போது ஓபிஎஸ் தொண்டர்களால் நாங்கள்; தொண்டர்களுக்காகவே நாங்கள் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.