முதலமைச்சர் பதவிக்கு குறி! கோட்டையில் ஓபிஎஸ் நடத்திய யாகம்!

கோட்டையில் யாகம்


சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் உறவினர் திருமண விழாவில் பங்கேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது பேசியதாவது

    இன்று அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் யாகத்தை நடத்தி உள்ளார். 

மேற்குவங்கத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றேன். இதனால் இன்று திருமண விழாஙில் பங்கேற்றதால் பேச கூடிய வாய்ப்பையும் பெற்று உள்ளேன. ஓபிஎஸ்தான்., சமாதியில் ஒருமுறை யாகம் நடத்தினார்-இதனால் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கலாம், முதல்வர் மீது நான் குற்றம் சுமத்தியதற்காக என் மீது வழக்கு தொடுக்கட்டும்.

முதல்வர்எடப்பாடி பழனிசாமி கொலை குற்றவாளி ஆக சிறைக்கு செல்லவிருக்கிறார். இதனால் முதல்வர் பதவி இடம் காலி ஆகிறது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தி இருக்கலாம்,கோடநாட்டில் உண்மையில் நடந்திருப்பது, ஜெ., இறந்தவுடன் கோடநாட்டில் வைத்திருந்த ஆவணங்களை( சசிகலா, முதல்வர், ஓபிஎஸ், தினகரன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்) எடுக்கவே நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன

ஜெ., மருத்துவமனையில் இருந்த போது கோடநாட்டில் நடந்த்து என்ன,ஆனால் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும், கோடநாடு விவகாரத்தில் ஜாமினில் வந்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய முதல்வரின் செயல் தவறானது கோட்டையில் துணை முதல்வர் அறையில் யாகம் நடத்தியது எப்படி.?

   அங்கு யாகம் நடத்துவது முறையா, சத்திய பிரமனாம் செய்யும் போது என்ன அனைத்தும் சமம் என்று தானே செய்தீர்கள், முதல்வர் பதவியை  பிடிக்கவோ அல்லது ஆவணங்களை கைப்பற்றவோ இந்த யாகம் நடந்துள்ளது,பாஜகவுக்கு எடுபிடியாக இருக்க மாட்டோம் என துணை சபாநாயகர் தம்பிதுரையே சொல்லி இருக்கிறார்,

மேற்கு வங்கத்தில் 22 கட்சி தலைவர்கள் சேர்ந்து நடந்த மாநாடு நடந்த்து. அங்கு இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என சொல்லவில்லை.  திமுக நடத்திய கூட்டத்தில் நாங்கள் ராகுல் பிரதமர் வேட்பாளர் என தமிழக மக்களின் எண்ண ஓட்டமாக சொன்னோம். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் மாறுபடுகிறது. ஆகையால் மேற்குவங்கத்தில் சூழல் வேறு. அங்கு தேர்தல் முடிந்த பின்பு பிரதமரை தேர்வு செய்யலாம் அவர்கள் எண்ணுகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வர வாய்ப்பு. ஆகையால் மத்திய, மாநிலத்தில் நல்லாட்சி அமைய வேண்டயது அவசியம்.