துணை முதலமைச்சர் ஓபிஎஸ் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதி! முதலமைச்சர் எடப்பாடி விரைகிறார்!

துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓ பன்னீர்செல்வம் தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது ஜெயலலிதா அவர்களால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஓபிஎஸ். ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ. பன்னீர்செல்வம் அணியும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒன்றாக இணைந்ததை அடுத்து ஓபிஎஸ் துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் அமைந்துள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் ஜெனரல் ஹெல்த் செக் அப் காக மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துனண முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களை பார்க்க இன்று மதியம் மருத்துவமனைக்கு நேரடியாக வர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.