27 ஆண்டுகளாக மாயமாகியுள்ள சகோதரரை மீட்டுத்தருமாறு இளைஞர் ஒருவர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய ஒரே ஒரு கடிதம்..! அண்ணனை தேடி எல்லைகளை கடந்து புறப்படும் தம்பி..! நெகிழ வைக்கும் சம்பவம்!
கேரள மாநிலத்தில் தனல்சேரி என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த சனல்குமார் என்ற இளைஞர் 27 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்திற்கு ராணுவ பணிக்காக சென்றுள்ளார். அங்கு சென்ற நாளில் இவர் தன் குடும்பத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளார். "ஒரு வழியாக எந்த இடையூறுமின்றி குஜராத்துக்கு வந்துள்ளேன். வெளியே மழை பெய்து கொண்டிருப்பதால் வெப்பம் பெரிதளவில் குறைந்துள்ளது. நீங்கள் அனைவரும் நலம் என்று நம்புகிறேன்" என்று எழுதி இருந்தார்.
ஆனால் அதற்குப்பின் அவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளாக அவருடைய உறவினர்கள் அவருடைய கடிதத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில் சனல்குமாரின் தந்தையான மத்திய மாநில அரசுகளை சேர்ந்தஉயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித உபயோகமும் இல்லை.
இதனிடையே காலப்போக்கில் தர்மேந்தர் மறைந்தார். தற்போது சனல்குமாரின் இளைய சகோதரரான ஹரீந்திரன், தன் அண்ணனை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். அவர் மத்திய அரசை நாடி பல விவரங்களை சேகரித்துள்ளார். அதாவது 2009-ஆம் ஆண்டில் சனல் குமார் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், 1992-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில், அவரை பணி நிமித்தமாக வெளியேறியதாகவும் இராணுவம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராணுவத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக சனல் குமார் பதுங்கி வாழ்ந்து கொண்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் கருதுகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவரின் உதவியுடன் ஹரீந்திரன் தன்னுடைய சகோதரரை தேடி வருகிறார்.
இந்த செய்தியானது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.