திருமணமாகி 10 நாட்கள்! விருந்துக்கு சென்ற ஜோடி! மனைவி கண் முன்னால் துடிதுடித்து இறந்த கணவன்! அதிர்ச்சி காரணம்!

திருமணமான 10 நாட்களுக்குள் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 28. இவருக்கு 10 நாட்களுக்கு முன்னர் கலைச்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கலைச்செல்வியின் வயது 27. 

புதுமண தம்பதிகள் ராசிபுரத்தில் தங்களுடைய உறவினரின் திருமண விழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். விழாவில் பங்கேற்று மகிழ்ச்சியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, தினேஷ்குமார் கட்டுப்பாட்டிலிருந்து இருசக்கர வாகனம் விலகி சென்றுள்ளது.

இருசக்கர வாகனம் நேராக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியில் தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த தினேஷ்குமாரை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மனைவி கலைச்செல்விக்கு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.