தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு ஒரு வருட சம்பளம்..! கோடிகளை அள்ளிக் கொடுத்த பெண் தொழில் அதிபர்! யார்? ஏன் தெரியுமா?

மும்பை: இந்தி டிவி மற்றும் சினிமா தயாரிப்பாளர் ஏக்தா கபூர், தனது ஓராண்டு சம்பள தொகையை ஊழியர்களுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஏராளமான தொழில் நிறுவனங்களின் வர்த்தகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானம் இன்றி அல்லாடுகின்றனர்.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த பிரபல டிவி மற்றும் சினிமா தயாரிப்பாளரான ஏக்தா கபூர், தனது பாலாஜி டெலிஃபிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இதன்படி, தனது ஓராண்டு வருமானமான ரூ.2.50 கோடியை அவர்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இந்த தொகையை பாலாஜி டெலிஃபிலிம்ஸ் ஊழியர்கள், தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொள்வார்கள் என்றும், வேலையில்லாத காலத்தில் அவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஏக்தா கபூர் குறிப்பிட்டுள்ளார்.