5 ரூபாய்க்கு சேலை..! 1 ரூபாய்க்கு லுங்கி..! அசர வைக்கும் ஜவுளிக்கடை ஆஃபர்..! எங்க தெரியுமா?

வந்தவாசியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஐந்து ரூபாய் நாணயத்திற்கு புடவையும் ஒரு ரூபாய் நாணயத்தில் லுங்கியும் விற்கப்படும் என்று அறிவிப்பு வந்ததால் கடை அருகே மக்கள் கூட்டம் அலைமோதியது.


வந்தவாசியில் உள்ள பஜார் சாலையில் சர்க்கார் சில்க்ஸ் சென்ற துணிக்கடை இயங்கிவருகிறது. கடையின் 51வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு ஐந்து ரூபாய் நாணயத்திற்கு ஒரு புடவையும், ஒரு ரூபாய் நாணயத்திற்கு லுங்கியும் அந்த கடையில் விற்பனை செய்யப்படவுள்ளதாக கடை உரிமையாளர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த கடையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் அந்த கடை உள்ள பஜார் சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.