பாமக மேடையில் மின்சாரம் தாக்கியது! ஒருவர் பலி! ஒருவர் உயிர் ஊசல்! ராமதாஸ் கூட்டத்தில் விபரீதம்!

சென்னை அருகே பாமக பொதுக்கூட்ட மேடையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம்  மதுராந்தகம் தேரடி தெருவில் நேற்று நடந்த பா.ம.க பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்று பேசினார்.  கூட்டம் முடிந்த பிறகு மேடையை அகற்றும் பணி நடைபெற்றது. கட்சி கொடிகளை எலக்ட்ரிசியன் சூர்யா மற்றும் ஆறுமுகம் அகற்றினர். 

அப்போது அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அவர்கள் இருவர் மீதும் உரசியது.  இதனால் மின்சாரம் பாய்ந்து இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். 

அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சூர்யா உயிரிழந்தார். ஆறுமுகத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாமக கூட்டத்தில் நடைபெற்ற இந்த விபரீதத்தில் பரபரப்பு ஏற்பட்டது.