பிரித்தானிய நாட்டில் தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவரான ஜோனதன் பில்டன் என்பவர் இளம்பெண் ஒருவர் குளிப்பதை எட்டி பார்த்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் குளிக்கும் போது எட்டிப்பார்த்த நாட்டிலேயே பிரபல டாக்டர்..! கண்டுபிடித்த பிறகு அவர் கூறிய பகீர் காரணம்!

ஜோனதன் பில்டன் என்பவர் பிரித்தானிய நாட்டில் தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவராக இருந்து வருகிறார் மேலும் அவர் அதிக ஊதியம் வாங்கும் மருத்துவர்களில் ஒருவர் ஆவார். 56 வயதாகும் அந்த மருத்துவர் சுமார் 224,999 பவுண்டுகள் ஊதியமாக பெற்று வருகிறார்.
தலைசிறந்த மருத்துவரான ஜோனதன் மிகவும் கீழ்தரமான செயல் ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அதாவது பிரித்தானியா நாட்டை சேர்ந்த 15 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் குடிப்பதை அவருக்கு தெரியாமல் துவாரம் ஒன்று வழியாக ஊர்ந்து சென்று எட்டிப் பார்த்திருக்கிறார். ஜோனதன் மறைந்திருந்து எட்டிப் பார்ப்பதை அந்த இளம்பெண் கவனித்து விட்டார்.
மருத்துவர் ஜோனதன் மீது அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ஜோனதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் அவரை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஐந்து மாதகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
ஜோனதனுக்கு சிறை தண்டனையை வழங்கி இருந்தாலும் தற்காலிகமாக அந்த தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவ கவுன்சிலில் ஜோனதன் நீடிப்பாரா என்பது சந்தேகமாக இருந்து வருகிறது. இருப்பினும் மருத்துவர் பதிவேட்டில் இருந்து அவரது பெயர் நீக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை பற்றி விசாரித்தபோது ஜோனதன் தனக்கிருக்கும் வேலைப்பளு தான் தன்னை இவ்வாறாக செய்ய தூண்டியதாக கூறியிருக்கிறார். ஒரு நாட்டின் தலை சிறந்த மருத்துவரே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.