கொரோனாவுக்கு மருந்து ரெடி! நம்பிக்கை மருத்துவர்!

சீன நாட்டின் மத்திய பகுதியில் வுஹான் என்கிற மாகாணம் உள்ளது. அது ஒரு கடற்கரை ஒட்டிய பகுதியாகும்.


அங்கிருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் என்கிற ஒரு வகை வைரஸ் தொற்று கண்டறியபட்டது. இந்த வைரஸ் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். அங்கிருக்கும் மிகப்பெரிய இறைச்சிக்கூடம் ஒன்றில் கோழி, வாத்து, ஆடு மற்றும் மீன் போன்ற ஏராளமான கடல்சார் இறைச்சி வகைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே இந்த கொரோனா வைரஸ் இங்கிருந்து தான் பரவியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இந்த கொரோனா வைரஸ் ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸை விட சில மாறுபாடுகள் கொண்டிருக்கிறது. எனவே இதனை ‘வுஹான் கொரோனா வைரஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.

2002ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இதே போன்ற ஒரு வைரஸ் உருவாகியிருந்தது. அதற்கு சார்ஸ் என்று பெயரிடப்பட்டது. அதிவேகமாக உலகமெங்கும் பரவி பெரும் அச்சத்தை உருவாக்கியது சார்ஸ் வைரஸ். சீன மக்களின் அலட்சியமே அந்த வைரஸ் உலகமெங்கும் பரவ காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். அவர்கள் நோய் கண்ட சில நாட்கள் வரை அதனை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் மறைத்து விடுவதால் ஏற்படும் விளைவுகள் தான் அதிகம் என்று கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் இந்த சார்ஸ் வைரஸை விட வெகு விரைவாக உலகமெங்கும் பரவி கொண்டிருக்கிறது. இதனால் சீனாவில் வுஹான் பகுதி முழுவதும் சீல் வைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் தொற்றிய மனிதருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு முதலில் உடலில் உள்ள வெள்ளையனுக்களை குறைத்து விடும்.

இதனால் நோய் எதிர்ப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. பின்னர் நுரையீரலை பாதித்து மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டு பண்ணிவிடும். அடுத்ததாக வேகமாக உடலின் முக்கிய உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை தொற்றி செயலிழக்கச் செய்யும். இவ்வாறாக தொடர் சிக்கலில் இறுதியில் மரணம் கூட சம்பவிக்கலாம். இதனால் தான் உலக நாடுகள் பலவும் இன்று மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸினால் உண்டாகக் கூடிய பாதிப்புகளில் இருந்து சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்று உறுதியாக கூறுகிறார் சென்னையில் உள்ள ரத்ன சித்த மருத்துவமனையை சார்ந்த சித்த மருத்துவர் ஒருவர். டெங்கு பாதிப்புகளின் போது சித்த மருத்துவத்தால் கொடுக்கப்பட்ட கசாயம் மூலம் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

அந்த வகையில் தற்போது நிலவக்கூடிய இந்த கொரோனா வைரஸ் உண்டாக்கக்கூடிய சிறுநீரக செயலிழப்பை 12 மணி நேரத்தில் சரி செய்ய முடியும் என்று ஆதாரத்துடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, நாங்கள் இதுவரை 550 பேரை எங்கள் சித்த மருந்துகளால் இது போன்ற உடனடியாக நிகழக்கூடிய சிறுநீரக செயலிழப்பை தடுத்து சரி செய்து முழுமையாக குணப்படுத்தி இருக்கிறோம். ‘வுஹான் கொரோனா வைரஸின்’ அபாயம் இறுதியில் அதிவேகமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படைவது தான்.

எனவே எங்கள் இந்த மருந்தால் கட்டாயம் இதை தடுத்து உயிரழப்பை கட்டுப்படுத்த முடியும் என்கிறார். எங்கள் இந்த மருந்து தொடர்பான முறைகளை தரமணியில் உள்ள இந்தியன் பயோ டைவர்சிடியில் முறையாக பதிவு செய்திருக்கிறோம். மேலும் ஆயுஷ் துறைக்கு 2017ஆம் ஆண்டில் எங்களது இந்த முயற்சிகளை பற்றிய முழு தகவல்களை பரிசீலனைக்காக அனுப்பி இருக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் தான் என்று பரிசோதனை செய்து கண்டறிய முடியாவிட்டாலும் சில அறிகுறிகளை வைத்து கண்டறிந்து சிகிச்சை தொடங்கலாம். காய்ச்சல் கண்ட சில மணி நேரத்தில் அடுத்து அடுத்து உடலில் பாதிப்புகள் உருவாகக்கூடும். தொடர் இருமல், மூச்சு திணறல், வாந்தி, உடல் சோர்வு, வெள்ளை அணுக்கள் குறைவது, நுரையீரலில் நோய் தொற்று, சிறுநீரகத்தில் யுரியா அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இவையெல்லாம் வெகு வேகமாக பரவக்கூடிய வகையில் ஏற்படும் என்பது தான் இந்த வைரஸின் முக்கிய அம்சங்கள் ஆகும். எனவே இந்த சோதனைகளை வைத்தே சிகிச்சை செய்து காப்பாற்ற முடியும் என்று உறுதி தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்தால் சீனா சென்று சிகிச்சை அளிக்க தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.