மெகா கூட்டணியில் மேலும் ஒரு கட்சி!! இணையப்போகும் அந்த அடுத்த கட்சி எது??

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் தங்கமணி வேலுமனி சந்திக்க உள்ளதாக தகவல்


அதிமுக தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக சந்திப்பு நடைபெற உள்ளதாகவும் நாளை காலை சென்னை கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் அதிமுக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே ஒரு தொகுதிக்கான கையெழுத்து ஒப்பந்தம் நடைபெறவுள்ளதாகவும்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பாக தஞ்சாவூர் அல்லது மயிலாடுதுறை தொகுதி கேட்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் பாஜக 5 தொகுதிகள்

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்  புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதிகள் புதிய நீதிக் கட்சிக்கு 1 தொகுதிகள் என் ஆர் காங்கிரஸ் 1 தொகுதிகள் என  கூட்டணிக் கட்சிகளுக்கு 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிக்கான கையொப்பம் ஒப்பந்தம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

அதிமுக திமுக நிகராக 20 தொகுதிகளில் நிற்க உள்ளதாகவும் தெரியவருகிறது