முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் எம்.ஜி.ஆர். ஆட்சி !

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். முன்னதாக பன்னீர்செல்வம் வேண்டுகோள் படி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது.


அந்த வழிகாட்டுதல் குழுவில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார் அமைச்சர் டி. ஜெயக்குமார். இன்று அவர் பெருமகிழ்வில் இருந்தார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் மீண்டும் வென்று காட்டுவோம் என்று குறிப்பிட்டார்.

"மக்கள் மனதில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் நமது புரட்சித்தலைவர், சத்துணவு தந்த சரித்திர நாயகன், ஏழைகளின் தலைவன் எம்.ஜி.ஆர். அவர்களின் சீர்மிகு ஆட்சியை மீண்டும் தேர்தலில் வென்று தொடர்வோம். எங்கள் இதயங்களில் வீற்றிருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை மீண்டும் தருவோம்.’’ என்று தெரிவித்தார்.