மருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறேன்.. எடப்பாடி பழனிசாமி

சுதந்திர போராட்ட தியாகிகளும், வீரத் தமிழர்களுமான மருது சகோதரர்களின் வீரத்தை, அவர்களின் நினைவு தினத்தன்று போற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.


இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் இந்திய சுதந்திர போர் விதையை விதைத்தவர்கள் மருது சகோதரர்கள். ஆயுதம் ஏந்திப் போராடியதால், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்களின் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தேசத்தின் அனைத்து குழுக்களையும் ஒன்றாக இணைக்க முயற்சித்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கடைசி வரை போராடி, தங்கள் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ் மகன்களான பெரிய மருது, சின்ன மருது எனும் மருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.