பஸ் - கார் மோதியதில் 4 பேர் பலி! இன்னொரு விபத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளை உள்ளிட்டோருக்கு நேர்ந்த பரிதாப முடிவு!

சாலையில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் கார் மீது ஆம்னி பஸ் வேகமாக மோதியதில் 4 பேர் இறந்த சம்பவமானது உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அகில இந்திய மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் ஐசக். இவர் அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் கண்ணன் பகுதியை சேர்ந்தவராவார். இவருடைய வயது 54. இவருடைய மகனின் பெயர் விண்ணரசு. விண்ணரசின் வயது 27. 

அவருக்கு பெண் பார்ப்பதற்காக அரசு தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் திருநெல்வேலிக்கு சென்றார். காரை வினோத் (25). நிச்சயதார்த்தத்தை முடித்த பின்னர் திருநெல்வேலி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

உளுந்தூர்பேட்டை எறிஞ்சி பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது அரசு பேருந்து ஒன்று இவர்களது காரின் பக்கவாட்டில் லேசாக உரசியது. இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் வினோத் காரைவிட்டு இறங்கி அரச பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவ்வழியே ஆம்னி பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வேகமாக சென்று கார் மற்றும் அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியுள்ளது.

மோதிய அதிர்ச்சியில் சம்பவயிடத்திலேயே பேருந்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி (34), காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சற்குணன் (33) உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மதியழகன் (51), சிந்து (19), மீனா (11), ஜானகி (70), அரசு பஸ் டிரைவர் கோவிந்தராஜ், சுப்பிரமணியன் (30) மற்றும் காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஐசக் குடும்பத்தினர் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் உடனடியாக எடைக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 22 பேரையும் அருகிலுள்ள உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அதனை சீர் செய்தனர். இந்த சம்பவமானது உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.