பளபளப்பான தோலுக்கு ஆலிவ் எண்ணெய் வேறு என்னவெல்லாம் நன்மை தருகிறதுயென பாருங்கள் ..

மிகவும் விலை உயர்ந்த ஆலிவ் எண்ணெய், ஆலிவ் மரத்தின் கொட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆரோக்கியம் தரவல்லது.·         இதயத்துக்கு ஏற்ற ஒரே எண்ணெய் என்று ஆலிவ் குறிப்பிடப்படுகிறது. மாரடைப்பு வராமல் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது.

·         ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

·         தோல் பிரச்னை மற்றும் வறட்சியால் அவதிப்படுபவர்கள் தினமும் 15 நிமிடங்கள் ஆலிவ் ஆயிலை தடவி குளிப்பது நல்லது. தோல் பளபளப்பாக மின்னவும் செய்யும்.

·         ரத்தக் குழாயில் கொழுப்பு தேங்கிநிற்காமல் தடுக்கும் செயலையும் ஆலிவ் எண்ணெய் செய்கிறது.