கைவிட்ட பிள்ளைகள்! 20 வருடங்களாக கழிப்பறையில் வசித்து வரும் மதுரை பெண்மணி! நெஞ்சை கலங்க வைக்கும் நிகழ்வு!!

பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் 20 வருடங்களாக தாயொருவர் கழிவறையில் கழித்த சோதனையானது சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் கருப்பாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் தன்னுடைய உறவினர்களால் கைவிடப்பட்டார். 20 ஆண்டுகளாகவே மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பாடி பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட கழிவறையில் வசித்து வருகிறார்.

கழிவறைக்கு வரும் பொதுமக்கள் தரும் சில்லரை பணத்திலும், ரேஷன் கடை அரிசியிலும்  தன்னுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருவதாக அழுது புலம்பியுள்ளார். முதியோர் உதவித் தொகை பெறுவதற்காக தன்னிடம் 5 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கூறினார். 3 நாட்களுக்கு ஒரு முறை சாப்பாடு சமைத்து சாப்பிட்டு வருவதாக கூறினார்.

கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் கழிவறை மூடப்பட்ட போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். முதியோர் உதவித்தொகை கிடைத்தால் பட்டினியில் இருந்து மீண்டு தனக்குரிய வாழ்வாதாரத்தை அடைய முடியும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

சமூக நல உதவியாளர்கள் யாராவது இந்த முதியவருக்கு உதவ முன்வந்தால் அவர்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்.