இல்லாதவர்களுக்கு இட்லி - வடை இலவசம்! ராமேஸ்வரத்தை கலக்கும் ராணிப் பாட்டி!

பசியோடு வரும் ஏழைகளுக்கு பாட்டி ஒருவர் இலவசமாக இட்லி வழங்கும் செய்தியானது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.


தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டில் பிறந்தவர் ராணி. இவர் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலுக்கு பின்னர் குடும்பத்தினருடன் ராமேஸ்வரத்திற்கு இடம்பெயர்ந்தார். இவருடைய கணவரின் பெயர் நாராயணன். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுள்ளது குறிப்பிடத்தக்கது.ராமேஸ்வரத்தில் உள்ள அகத்தியர் தீர்த்தம் பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த 36 ஆண்டுகளாக இதே பகுதியின் சாலையோரத்தில் இட்லி கடை வைத்து நடத்துகிறார். கிழிந்த தார்ப்பாயின் கடையை நடத்தி வரும் ராணி 4 இட்லிகள் மற்றும் 1 வடையை குறைந்த விலைக்கு விற்கிறார். இதனால் இவர் அந்த பகுதி முழுவதும் மிகவும் பிரபலமானவர். 2 வகையான சட்னிகள் மற்றும் சாம்பார் என அனைவரின் பசியையும் போக்குகிறார். 

பணம் இல்லாதவர்கள் வந்து பசி என்று நின்றாலும் அவர்களுக்கு பசி நிறையும் அளவிற்கு சாப்பாடு போடுகிறார். பங்கு வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி அவ்வழியே செல்லும் யாத்ரீகர்களும் விரும்பி சாப்பிட்டு செல்கின்றனர்.

தொடக்கத்தில் விரகு அடுப்பு சமைத்து கொண்டிருந்த போது ஏற்பட்ட கண் எரிச்சலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் பசியையாற்றி வந்தார். தற்போதுதான் இவர் கேஸ் அடுப்புக்கு மாறியுள்ளார். கடந்த 5 வருடங்களாக இவர் அகத்தியர் தீர்த்தம் கடற்கரை சாலையில் கடை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பணமே குறிக்கோளாக இருக்கும் இந்த உலகத்தில் இப்படியும் ஒரு புண்ணியவதி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.