மேடையில் வைத்து இளம் பெண் பாடகியிடம் முதியவர் செய்த பகீர் செயல்..! பதிலுக்கு அரங்கேறிய எதிர்பாராத சம்பவம்!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலின் காலில் வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் , இந்தி , தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலால் பாடல்களைப் பாடி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். சங்கீதத்திற்கு மொழி ஒன்றும் தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் ஸ்ரேயா கோஷல். இவரின் இனிமையான குரல் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இவர் தமிழில் சினிமாவில் பாடிய பல திரைப்பட பாடல்களுக்கு விருதுகளையும் பெற்றுள்ளார். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் பங்கேற்ற ஸ்ரேயா கோஷல் பாடல்களைப் பாடி அங்கு வந்திருந்த அனைவரையும் மகிழ்வித்தார். அப்போது அங்கு வந்திருந்த வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் ஸ்ரேயா கோஷலுக்கு மாலை அணிவித்தார். உடனே அவரது கால்களிலும் அந்தப் பாட்டி விழுந்து வணங்கினார்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரேயா கோஷல் பயந்து பின்னால் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த வயது முதிர்ந்த பாட்டியை தூக்கிவிட்டு கட்டியணைத்து சிரித்துப் பேசினார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவானது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.