கர்பபிணி பெண்ணின் வயிற்றில் பழைய துணியை வைத்து அறுவைசிகிச்சை செய்ததால் உயிரிழந்த சம்பவமானது விருதாச்சலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்திற்கு பிறகும் வீங்கிய கர்ப்பிணியின் வயிறு..! ஆப்பரேசனின் போது துணியை உள்ளே வைத்து தைத்த கொடூரம்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!
விருதாச்சலத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பிரியா. பிரியா சென்ற ஆண்டு கர்ப்பமடைந்துள்ளார். இது அவருக்கு தலைப்பிரசவமாகும். இந்நிலையில், டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியன்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
பிரசவத்திற்காக பிரியாவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒருவழியாக பிரியா ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்த போது பிரச்சனைகள் தொடங்கின. அதாவது அறுவை சிகிச்சைக்கு பின்னர், பிரியாவின் வயிறு வீங்க தொடங்கியுள்ளது.
இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. உடனடியாக பிரியாவை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி துரதிஷ்டவசமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
இது பிரியாவின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அறுவை சிகிச்சையின்போது பிரியாவின் வயிற்று பழைய துணியை வைத்து தையல் போட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய கணவர் கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக பிரியாவின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவமானது விருதாச்சலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.